தலைப்புச் செய்திகள் :
Home » » Soldiers must remain alert at all! - Kottapaya

Soldiers must remain alert at all! - Kottapaya

Written By Unknown on Aug 6, 2012 | 8:42 AM

படையினர் தொடர்ந்தும் விழிப்பு நிலையிலேயே இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“முப்பது ஆண்டுகாலப் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும் கூட, நாட்டின் பாதுகாப்பையும், உறுதிப்பாட்டையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது, எல்லா படையினரதும் முதன்மையான கடமையாகும்.

எந்தவொரு தாக்குதல் நடவடிக்கையிலும் இராணுவம் ஈடுபடாது போனாலும், புதிய அச்சுறுத்தலாக உருவெடுக்க முனையும் தீவிரவாதிகள் மீளஒருங்கிணைவதைத் தடுக்க வேண்டியது அவர்களின் முக்கியமான கடமை.

விடுதலைப் புலிகளின் எச்சங்கள் இலங்கைக்கு வெளியே செயற்படுவது எமக்குத் தெரியும்.

நாட்டுக்குள் உள்ளவர்கள் கூட, நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முனையலாம்.

இந்த அச்சுறுத்தல்கள் குறித்து நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது முக்கியமானது.

அமைதியையும், உறுதிப்பாட்டையும் தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Share this article :
 

Creating and Maintenance : Chanumaa
Copyright © 2012. ஆர்வலன் - All Rights Reserved