தலைப்புச் செய்திகள் :
Home » » Graduates of the two state offices simultaneously worked!

Graduates of the two state offices simultaneously worked!

Written By Unknown on Aug 6, 2012 | 8:23 AM

சமகாலத்தில் இரு அரச அலுவலகங்களில் கடமையாற்றிய பட்டதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டணை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அரசங்கம் பட்டதாரிப் பயிலுனர் நியமனம் வழங்கி பட்டதாரிகள் கிராமசேவையாளர்களின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வருவது தெரிந்த விடயம்.

இவ்வாறு பட்டதரிப் பயிலுனர் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சிலர் ஏற்கனவே அரசாங்க திணைக்களங்கள் சிலவற்றில் கடமைபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு பட்டதாரிப் பயிலுனர் நியமனம் கிடைத்ததும் தமது பழைய உத்தியோகத்தையும் கைவிட மனமின்றி பழைய தொழிலையும் செய்து கொண்டு கிராமசேவையாளர்களுக்கு உதவியாளர்களாகவும். கடமையாற்றி வந்தமை யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் திணைக்களத்திலும் வேறு சில திணைக்களங்களிலும் இவ்வாறு ஏற்கனவே கடமையாற்றியவர்கள், பட்டதாரிப் பயிலுனர் நியமனத்தையும் பெற்று ஒரே நேரத்தில் இரண்டு அரச திணைக்களங்களில் கடமையாற்றியது அரச உயரதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர்.

இவ்வாறு ஒரே நேரத்தில் இரு பதவி வகித்தவர்களில் பெண்களும் அடங்குவர்.

பட்டதாரிகள் பல்கலைக்கழகம் செல்ல முடியாது வேறு தொழில்களை நம்பியிருக்கும் இளைஞர் யுவதிகளின் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது உத்தியோகமும் பார்த்துக் கொண்டு பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் வரை தமிழ்த்தேசியம் பேசும் இவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியதும் அரச கட்சிகளுக்கு வால்பிடித்து உத்தியோகம் பெறுவதுடன் இன்னொருவருக்குக் கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தைதையும் தட்டிப் பறிக்கின்றனர்.
Share this article :
 

Creating and Maintenance : Chanumaa
Copyright © 2012. ஆர்வலன் - All Rights Reserved