அண்மைய நாட்களில் சில செய்திப் பத்திரிகைகளில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தலைமையிலான உயர் மட்ட இராஜதந்திரிகள் குழு ஒன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளன என செய்தி வெளியாகியிருந்தன.
ஆனால் தற்போது அவரது பயண நிகழ்ச்சி நிரலில் அவ்வாறான விஜயம் ஒன்று இல்லை என அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தலைமையிலான உயர் மட்ட இராஜதந்திரிகள் குழு தற்போதைக்கு இலங்கை வருவது சாத்தியமில்லை.
௭திர்வரும் செப்டெம்பர் மாதம் 8ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவின் உயர் மட்ட இராஜதந்திரிகள் இலங்கைக்கு வரவுள்ளதாக கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாயின. இச் செய்திகளில் உண்மையில்லை.
அத்துடன், இந்த விடயம் தொடர்பாக சில பத்திரிகைகளில் வெளியான செய்திகள் உண்மைக்கு முரணானவை ௭ன்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
துணை இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக்கின் நிகழ்ச்சி நிரலில் தற்போதைக்கு இலங்கைக்கான விஜயமொன்று இடம்பெறவில்லை ௭ன்றும் அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.