தலைப்புச் செய்திகள் :
Home » » "I come to India soon"! - President to the Anand Sharma

"I come to India soon"! - President to the Anand Sharma

Written By Unknown on Aug 6, 2012 | 7:53 AM

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரைவில் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல் தெரிவிக்கின்றன.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவிடம் அவர், “நான் விரைவில் இந்தியா வருவேன்” என்று கூறியதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மதிய விருந்துடனான இந்தச் சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து- முக்கியமாக இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

தொழில்வாய்ப்புக்காக இலங்கை வரும் இந்தியர்களின் மீதான நுழைவிசைவுக் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுபற்றி ஆராயவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நுழைவிசைவுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து ஆலோசிக்கவும் ஜனாதிபதி மஹிந்த இணங்கியுள்ளார்.

அத்துடன் திருகோணமலையில் இந்தியாவின் உதவியுடன் சிறப்பு பொருளாதார வலயத்தை அமைப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Share this article :
 

Creating and Maintenance : Chanumaa
Copyright © 2012. ஆர்வலன் - All Rights Reserved